உலக கழிவறை தின விழிப்புணர்வு நடைபயணம்

மயிலாடுதுறை அருகே உலக கழிவறை தின விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது

Update: 2022-11-19 18:45 GMT

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் உலக கழிவறை தின விழிப்புணர்வு தூய்மை நடைபயணம் நடந்தது. நடைபயணத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட உதவித்திட்ட இயக்குனர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபயணம் தொடங்கியது. இதில் தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சுகாதாரத்தை பாதுகாப்போம், திறந்தவெளியை கழிவறை போல பயன்படுத்துவதை தவிர்ப்போம், கழிவறையை உபயோகிப்போம், கழிவுநீர் தேங்குவதை தடுப்போம், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பொருட்களை தவிர்ப்போம் என்பன போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரிவரை நடைபயணம் நடந்தது. அதைத்தொடர்ந்து சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்