உலக திருக்குறள் கூட்டமைப்பு கூட்டம்

கோவில்பட்டியில் உலக திருக்குறள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது

Update: 2022-07-24 17:14 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி லாயல் மில் காலனியில் ஒரு மஹாலில் உலக திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில் நெல்லை மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குனர் சேகர் காணொலி மூலம் தலைமை உரையாற்றினார். உலக திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு செயலாளர் தமிழரசன் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் கருத்தபாண்டி தொடக்க உரையாற்றினார்,

மாநில பொதுச்செயலாளர் தங்க.ஆதிலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பொருளாளர் ராம.சந்திரசேகரன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சாந்தகுமார், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற செயலாளர் நம். சீனிவாசன், துணைத்தலைவர் திருமலை முத்துசாமி, உரத்த சிந்தனை வாசர் வட்ட தலைவர் சிவானந்தம், பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் முத்துச்செல்வன், அமல புஷ்பம், கழுகுமலை முருகன், பொன்ராஜ் பாண்டியன், நெல்லை திருவள்ளுவர் மன்ற தலைவர் ராமசாமி, மற்றும் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அடுத்த ஆண்டு மே மாதம் 16, 17-ந்தேதிகளில் 1,000 குறள்நெறி ஆசான்களுக்கு பயிற்சி கொடுத்து கின்னஸ் சாதனை புரிய முடிவெடுக்கப்பட்டது.

முடிவில் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்