திசையன்விளை:
திசையன்விளை உலகரட்சகர் திருத்தல 138-வது ஆண்டு திருவிழா 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது.
10-ம் திருநாளன்று மாலையில் திருவிழா மாலை ஆராதனையும், ஆலயத்தை சுற்றி சப்பர பவனியும் நடந்தது. விழாவின் சிகர நாளன்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலியும், மாலையில் நகர வீதிகளில் சப்பர பவனியும் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு, உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி, மாலைகள் கொடுத்து நேர்ச்சை கடன் செலுத்தினர்.