சாலைப்புதூரில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு
சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் டயானா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார். செவிலியர்கள் சொர்ணலதா, ரமா, மகேஸ்வரி, மெர்சி, கற்பகவள்ளி உள்ளிட்ட செவிலியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.