உலக ஓசோன் தின விழா

உலக ஓசோன் தின விழா

Update: 2022-09-19 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி வேதியியல் துறை சார்பாக உலக ஓசோன் தின விழாவில் கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்தகுமார் தலைமை தாங்கினார். வேதியியல் துறைத்தலைவர் ராஜேஸ்கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆனந்தா கல்லூரியின் கல்வி முதன்மையர் மெரிட்டோ ஆண்டோ பிரிட்டோ, கணினி பயன்பாட்டுவியல் துறைஉதவிப்பேராசிரியர் ஜான் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஓசோன் பாதிப்புகள் விளைவுகள் பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு போன்றவற்றை எடுத்துரைத்தனார். வேதியியல் துறை சார்பாக உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு துறை மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவிப்பேராசிரியர் ஜான்மெர்லின் நன்றி கூறினார். இந்நிகழ்வில் தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தே.பிரித்தோ மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வேதியியல் துறைத்தலைவர் ராஜேஸ்கண்ணன், ஒருங்கிணைப்பாளர் ஜான்மெர்லின் ஆகியோர் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்