உலக செவிலியர் தின விழா

வந்தவாசி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-05-12 17:25 GMT

வந்தவாசி

வந்தவாசி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தி.மு.க. நகர செயலாளர் எஸ்.தயாளன் தலைமை தாங்கினார்.

முதன்மை மருத்துவ அலுவலர் கே.சிவப்பிரியா, டாக்டர் எஸ்.கோகுலகிருஷ்ணன், நகரமன்ற தலைவர் எச்.ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்தாளுனர் கார்வண்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி பேசினார்.

பின்னர் செவிலியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் க.சீனிவாசன், தி.மு.க. நகர அவைத்தலைவர் நவாப்ஜான், நகரமன்ற உறுப்பினர்கள் ரிஹானா சையத்அப்துல்கரீம், கோ.மகேந்திரன், ஆர்.அன்பரசு, கோமாதா சுரேஷ், குடியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்