உலக புகையிலை ஒழிப்பு தினம் -உடல்நலத்தை பேணி போலீசார் ஆரோக்கியமாக வாழ வேண்டும் - கமிஷனர் நரேந்திரன்நாயர் பேச்சு

போலீசார் உடல் நலத்தை பேணி காத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று கமிஷனர் நரேந்திரன்நாயர் பேசினார்.

Update: 2023-06-01 20:27 GMT


போலீசார் உடல் நலத்தை பேணி காத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று கமிஷனர் நரேந்திரன்நாயர் பேசினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி மதுரை மாநகர போலீசாருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அழகர்கோவில் சாலையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. அதில் தனியார் பல் மருத்துவமனை கல்லூரி டீன் சரவணன், முதல்வர் தன்வீர், தலைமை மருத்துவர் வின்னி பிரட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்கள் போலீசாருக்கு புகையிலை தொடர்பான கெடுதல்கள், உடல் உபாதைகள், சிரமங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். அதன் பின்பு போலீசாருக்கான உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு போலீசாருக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.

புகையிலையினால் ஏற்படும் பாதிப்பு

இதில் சிறப்பு விருந்தினராக போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் கலந்து கொண்டார். அவர் பல் மருத்துவமனை சார்பில் வைக்கப்பட்டு விழிப்புணர்வு பலகைகள், போலீசாரின் உடல் பரிசோதனை பற்றிய தகவல்கள் ஆகியவற்றை கேட்டறிந்தார். பின்னர் அவர் போலீசார் தங்களது உடலை எவ்வாறு பேணி காக்க வேண்டும். புகையிலையினால் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவதோடு சமூகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் தலைமையிட போலீஸ் துணை கமிஷனர் மங்களேஸ்வரன், போக்குவரத்து திட்ட கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் திருமலை குமார், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் வேல்முருகன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்று பயன் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்