உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபயணம்

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

Update: 2022-05-31 19:22 GMT

திருச்சி, ஜூன்.1-

திருச்சி ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் ஆணையரகம், இந்திய அரசின் நிதி அமைச்சகம் சார்பில் விடுதலையின் அமுதப் பெருவிழா (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நேற்று உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. திருச்சி கண்டோன்மெண்ட் மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட நடைபயணத்தை சுங்க இலாகா முதன்மை ஆணையர் உமாசங்கர், சுங்க இலாகா மண்டல ஆணையர் பத்மஸ்ரீ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து நடைபயணத்தில் பங்கேற்று சென்றனர். பொதுமக்களிடம் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 'வாக்கத்தான்' என்ற பெயரில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. நடைபயணமானது பாரதிதாசன் சாலை, எம்.ஜி.ஆர். சிலை, அண்ணாநகர் வழியாக உக்கிரமாகாளி அம்மன் கோவிலை சென்றடைந்து. பின்னர் மீண்டும் அதே வழியாக ஜி.எஸ்.டி. ஆணையாளர் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜி.எஸ்.டி. அலுவலர்கள், ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர், வரி பயிற்சியாளர்கள், வணிகர்கள், ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் திரளானவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுபோல ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் புகையிலை எதிர்ப்பு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்