உலக சுற்றுச்சூழல் தின விழா

உலக சுற்றுச்சூழல் தின விழா

Update: 2023-06-05 18:45 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி ராஜா குமார் தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிபதி அருண் சங்கர் முன்னிலை வகித்தார். விழாவில் நீதிபதி ராஜா குமார் பேசும்போது, இயற்கை வளங்களான நீர்நிலை, காடுகள், வளிமண்டலம், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ இன்றியமையாதது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்க வேண்டும். இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழல் மட்டுமின்றி உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயன கழிவுகள், புகை என்பன நீர்நிலைகள், வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை மனிதர்கள் பாதுகாப்பது மிக முக்கியமாகும் என்றார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத்தலைவர் ராஜசேகர், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் கோவிந்த ராமன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவா, வழக்கறிஞர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை சட்ட தன்னார்வலர் அடைக்கல மேரி செய்திருந்தார்.

மேலும் செய்திகள்