ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தின விழா

ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.

Update: 2022-06-09 17:32 GMT

ஓசூர்:

ஓசூரில், மண் பாதுகாப்போம் இயக்கம் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்தின. ஓசூர் மூக்கண்டபள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் நிர்வாகி நரசிம்மன் தலைமை தாங்கினார். இதில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பொன்மணி, குவாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஆர்.சம்பங்கி, நிர்வாகி எம்.சத்யமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மேயர் சத்யா பேசுகையில், மண் பாதுகாப்போம் இயக்கத்திற்கு மாநகராட்சி சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். வருகிற 5 ஆண்டுகளில், மாநகராட்சி பகுதியில் 1 லட்சம் மரங்களை நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். விழாவின் போது, முதல் கட்டமாக 15,000 மரக்கன்றுகளை மேயர் சத்யா, நிர்வாகிகளிடம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்