உலக பூமி தின விழிப்புணர்வு கருத்தரங்கு
காட்பாடி நடுநிலைப்பள்ளியில் உலக பூமி தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
அரசின் சுற்றுச்சூழல் துறை, பள்ளிக்கல்வித்துறை, திருப்பத்தூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து உலக பூமி தின விழிப்புணர்வு கருத்தரங்கு காட்பாடி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. லைமை ஆசிரியை தேவகி தலைமை தாங்கினார். ஜங்காலப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின்தாஸ் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முரளீதர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பழசெடிகள், துணிப்பைகள், விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.