உலக தாய்பால் வாரவிழா

Update: 2023-08-24 18:45 GMT

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில் நேற்று உலக தாய்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தலைமை தாங்கினார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டில் துறை தலைவர் சுஜாதா வரவேற்று பேசினார்.

இதில் நாமக்கல் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அலங்கம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தாய்பாலின் சிறப்பினையும், நுட்பத்தினையும் மாணவிகளுக்கு தெளிவுபடுத்தினார். இதையொட்டி பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவற்றை மாணவிகள் பார்வையிட்டனர். முதுநிலை மாணவிகளால் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்