உலக விலங்கின நோய் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூரில் உலக விலங்கின நோய் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-07-06 11:31 GMT

உலக விலங்கின நோய் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முனுசாமி, உதவி இயக்குனர் (பிறப்பு, இறப்பு) சங்கர், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் பாலசுந்தரம், மாநகராட்சி அதிகாரிகள், கால்நடை டாக்டர் ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவமனைக்கு கால்நடைகளுடன் சிகிச்சைக்கு வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். இல்லையென்றால் நாய் கடித்தால் ரேபீஸ் நோய் ஏற்படக்கூடும். காய்ச்சல், தலைவலி இதன் அறிகுறியாகும். இதையடுத்து பதற்றம், தண்ணீரை கண்டாலே பயப்படும் சூழல் ஏற்படலாம். எனவே நாய்கள் கடித்தவுடன் காயத்தை சுமார் 15 நிமிடங்களுக்கு சோப்பு தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்தினால் நல்லது. பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்