சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

வால்பாறை நகராட்சியில் சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Update: 2022-07-26 16:57 GMT

வால்பாறை

வால்பாறை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நகராட்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். நகராட்சி மேலாளர் சலாவுதீன் முன்னிலை வகித்தார். 85 பள்ளிக்கூடங்களை சத்துணவு அமைப்பாளர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய நகராட்சி மேலாளர் சலாவுதீன் பேசுகையில், சத்துணவு அமைப்பாளர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல வேண்டும். உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து வழங்குவது போல சுகாதாரமான தரமான பொருட்களை கொண்டு தூய்மையான முறையில் உணவு சமைத்து வழங்க வேண்டும் என்று கூறினார்.

நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி பேசும்போது, சத்துணவு மையங்களை குறித்து எந்த புகார்களும் வரக்கூடாது. யானைகள் உடைத்த சத்துணவு மைய கட்டிடங்களை சரிசெய்யவும் உடைந்த பாத்திரங்களை வாங்கி தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ-மாணவிகளிடமும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் உறுதியளித்தார். முடிவில் சத்துணவு பிரிவு அதிகாரி தினேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்