3 மாதங்களுக்கு ஒரு முறை பணிக்குழு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை பணிக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் மேகநாத ரெட்டி அறிவுறுத்தினார்.

Update: 2022-12-17 19:26 GMT


குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை பணிக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் மேகநாத ரெட்டி அறிவுறுத்தினார்.

பணிக்குழு கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் தொடர்புடைய அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுடன் மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-

இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் மல்லிபுதூரில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் மற்றும் விருதுநகரில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் செயல்படுகிறது. இந்த இல்லங்களில் போதுமான இட வசதி உள்ளதால் தோட்டக்கலை துறை மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தி வேளாண்மை துறை குறித்து குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டு மையம் மூலம் வேலைவாய்ப்பை தேர்வு செய்தல் குறித்து ஆலோசனைகள் வழங்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் கூட்டங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் நடத்த வேண்டும்.

அனைத்து உறுப்பினர்களும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களின் மனதில் தோன்றும் தேர்வு பயத்தினை போக்கவும், நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பதற்கு ஏதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

தொழிற்பயிற்சி மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் தையல் பயிற்சி பெற விரும்பும் பட்சத்தில் அவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்