பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-01 18:04 GMT

பெரம்பலூர் 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கூறுகையில், ஆலை பணியாளர்கள், தொழிலாளர்கள் பகுபாடின்றி பணி ஓய்வு விழா நடத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண்டர் பணம் முழவதும் வழங்க வேண்டும். கூடுதல் நேரம் பணிபுரிபவர்களுக்கு, அதற்கான ஊதியம் முழுவதும் வழங்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்