தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பேட்டையில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேட்டை:
நெல்லை அடுத்த பழைய பேட்டையில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாத்திர தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 3 மாதம் ஆகியும் கூலி உயர்வை தராமல் காலம் தாழ்த்தும் பாத்திர உற்பத்தியாளர்களை கண்டித்தும், போலியான தொழிலாளர் சங்கத்தின் மீது தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்கக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் ராஜன் தலைமை தாங்கினார். பேட்டை பித்தளை பாத்திர தொழிலாளர் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் செந்தில் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மாவட்ட செயலாளர் சரவண பெருமாள் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.