அரச-வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைத்த தொழிலாளர்கள்

அரச-வேப்ப மரத்திற்கு தொழிலாளர்கள்திருமணம் செய்து வைத்தனர்.

Update: 2022-06-03 19:10 GMT

மணப்பாறை, ஜூன்.4-

மணப்பாறை பஸ் நிலையம் அருகே தட்டுரிக்்ஷா மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அமரும் இடத்தின் அருகே ஒரு அரச மரம் மற்றும் வேப்பமரத்தை நட்டு வைத்து பராமரித்து வளர்த்து வந்தனர். தற்போது 2் மரங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்ந்து பூக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து அவை இரண்டிற்கும் திருமணம் செய்து வைக்க தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று யாகபூஜைகள் நடத்தி 2 மரங்களுக்கும் திருமணம் செய்து வைத்தனர். இதில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்