மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் கரடி நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சம்

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் கரடி நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2023-04-06 20:04 GMT

அம்பை:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உண்டு. சில நாட்களுக்கு முன்பு தோட்டப்பணிக்கு வந்த பெண் தொழிலாளியை சிறுத்தை ஒன்று தாக்கியது. இந்நிலையில் மாஞ்சோலை 12-ம் காடு பகுதியில் கரடி ஒன்று சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பகுதிக்குப் பணிக்குச் செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் சுற்றித் திரிந்த கரடியை அந்த வழியாகச் சென்ற சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்