வீடு புகுந்து தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு
சேலத்தில் வீடு புகுந்து தொழிலாளியை தாக்கி பணத்தை பறித்து கூட்டாளியுடன் ரவுடி அட்டூழியத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் வீடு புகுந்து தொழிலாளியை தாக்கி பணத்தை பறித்து கூட்டாளியுடன் ரவுடி அட்டூழியத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடு புகுந்து பறிப்பு
சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 37). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது வீட்டுக்கு தாதகாப்பட்டியை சேர்ந்த ரவுடி எலி பிரகாஷ் என்பவர் தனது கூட்டாளியுடன் வந்தார்.
பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த மோகன்ராஜியிடம் தகராறில் ஈடுபட்டு அவர் வைத்திருந்த ரூ.3,100-ஐ பறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுத்ததால், அங்கு விறகு அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையை எடுத்து மோகன்ராஜை காலில் தாக்கி உள்ளார். அவருக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் வைத்திருந்த ரூ.3,100-ஐ பறித்து கொண்டு ரவுடி பிரகாஷ் கூட்டாளியுடன்அங்கிருந்து தப்பினார்.
பரபரப்பு
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மோகன்ராஜ் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி எலி பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து தொழிலாளியை தீக்கட்டையால் தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்ைப ஏற்படுத்தியது.