விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மந்திரமூர்த்திவயது (வயது 40). தொழிலாளி. கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மந்திரமூர்த்தி பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.