தொழிலாளி தற்கொலை

போடி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-11-12 18:45 GMT

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கன்னிமார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்