தொழிலாளி தற்கொலை
பெரியகுளத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம் வடகரை செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 56). கூலித்தொழிலாளி. இவர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இவர், பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டா்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.