வள்ளியூர்:
வள்ளியூர் அருகே குமாரபுதுகுடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்