விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை
தளி அருகே உள்ள உப்பராயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 32). கூலித்தொழிலாளி. முரளி மதுகுடித்து விட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முரளி சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.