தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-29 19:57 GMT

சிவகாசி, 

சிவகாசி அய்யப்பன் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46). இவர் சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குடிபழக்கம் உள்ள மாரிமுத்து சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காமல் குடித்து செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாரிமுத்து சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்