அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை ஞானியார் தெருவை சேர்ந்தவர் கவுரிநாதன் (வயது 46). தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவுரிநாதன் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி அம்பிகா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.