தொழிலாளிக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது

உடன்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-16 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி புதுமனை கோட்டைவிளையைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் ராஜேஷ்குமார் (வயது 31). கூலி தொழிலாளி. இவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். தங்கை அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ராேஜஷ்குமாரின் தங்கையை அவதூறாக பேசியுள்ளனர். இதனை ராஜேஷ்குமார் தட்டிக் கேட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு ராஜேஷ்குமார் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டுக்குள் புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்து மகன் லிங்கராஜ், பன்னீர் மகன் பாரதி, சங்கிலிமுருகன் மகன் பாலாஜி ஆகிய 3 பேரும் அவதுறாக பேசி அவரை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேஷ்குமார் குலேசகரன்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்