தொழிலாளிக்கு கத்திக்குத்து

விக்கிரமசிங்கபுரம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2023-01-31 20:05 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கீழஏர்மாள்புரத்தை சேர்ந்தவர் சீனிப்பாண்டி (வயது 34), சமையல் தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லும் அதே பகுதியைச் சேர்ந்த முருகாண்டி (42) என்பவரை அழைத்து சென்றார். அப்போது, அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சீனிப்பாண்டி கோடாரங்குளத்தில் இருந்து ஆலடியூர் ரோட்டில் வேப்பங்குளம் காலனி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முருகாண்டி அவதூறாக பேசி சீனிப்பாண்டியை கத்தியால் குத்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சீனிப்பாண்டி விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து, முருகாண்டியை நேற்று கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்