இண்டூர் அருகேநாகாவதி அணையில் மூழ்கி தொழிலாளி பலி

இண்டூர் அருகே உள்ள நாகாவதி அணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

Update: 2023-05-07 18:45 GMT

பாப்பாரப்பட்டி

கட்டிட தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள கழனிகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னண்ணன். இவருடைய மகன் வெற்றிவேல் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வேலைக்கு சென்ற வெற்றிவேல் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. இதற்கிடையே நேற்று மாலை நாகாவதி அணையில் உள்ள பாறை பள்ளம் என்ற இடத்தில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக இண்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணை

இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அணை நீரில் மிதந்த உடலை மீட்டனர். இதையடுத்து போலீசார் விசாரணையில் பிணமாக மிதந்தவர் கட்டிட தொழிலாளி வெற்றிவேல் என்பதும் அவர் அணையில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்