திண்டிவனம்
திண்டிவனத்தை அடுத்த கடவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் சுந்தரவதனம்(வயது 42). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று ஆவணிப்பூரில் இருந்து கோனேரிகுப்பம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுந்தரவதனம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.