வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-07-03 19:16 GMT

மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மிர்சபூர் கிராமத்தை சேர்ந்தவர் பப்லு சர்க்கார் (வயது 55). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடித்துவிட்டு விராலிமலையில் அவர் தங்கி இருக்கும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். குறிச்சிப்பட்டி பிரிவு சாலை அருகே சாலையை கடந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் பப்லு சர்க்கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பப்லு சர்க்கார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்