டிராக்டர் மோதி தொழிலாளி சாவு

டிராக்டர் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-08 19:15 GMT

தோகைமலை அருகே உள்ள கொன்னாச்சிப்பட்டியை சேர்ந்தவர் பரிமணம் (வயது 65), தொழிலாளி. இவர் நேற்று காலை ராக்கம்பட்டி வீராச்சாமி என்பவர் தோட்டத்திற்கு கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அருகே இருந்த டிராக்டர் பின்புறம் பரிமணம் நின்றுள்ளார். அப்போது திம்மம்பட்டி அருகே உள்ள முதலிக் கவுண்டனூர் பகுதியை ேசர்ந்த விஜய் என்பவர் பரிமணம் நிற்பதை பார்க்காமல் டிராக்டரை ஓட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மோதியதில் பரிமணம் கீழே விழுந்துள்ளார். இதில் டிராக்டர் டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிமணம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரிமணத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரிமணத்தின் மனைவி வெள்ளையம்மாள் (44) அளித்த புகாரின் பேரில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்