மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி- தந்தை, மகன் காயம் அடைந்தனர்

Update: 2022-09-25 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் இருளன் மகன் கருப்பசாமி (வயது 45). கூலித்தொழிலாளி. கருப்பசாமி நேற்று காலை பெரும்பத்தூருக்கு சென்று விட்டு தனது சொந்த ஊரான கண்டிகைப்பேரிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வாடிக்கோட்டை விலக்கு அருகே மோட்டார் சைக்கிள் திரும்பும் போது, கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்த முருகன், அவரது மகன் ஜெயச்சந்திரன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள், கருப்பசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் முருகன், ஜெயச்சந்திரன் ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரையும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார், கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்