மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

தாமரைக்குளத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-09-22 20:00 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் வீரப்பன் நகரை சேர்ந்தவர் நாச்சிமுத்து(வயது 70). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில் டீ குடிப்பதற்காக தாமரைக்குளத்தில் உள்ள சாலையை ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென நாச்சிமுத்து மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாச்சிமுத்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அரசம்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்