மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி தொழிலாளி சாவு

சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி தொழிலாளி சாவு

Update: 2022-07-04 13:03 GMT

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம் பேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52), கூலி தொழிலாளி.

இவர் சேத்துப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ஏழுமலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்