அரசு பஸ் மோதி தொழிலாளி பலி; மற்றொருவர் படுகாயம்

திசையன்விளை அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-11-08 19:45 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தொழிலாளி

திசையன்விளை அருகே உள்ள கன்னங்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 70). அதே ஊரைச் சேர்ந்தவர் நாகமல் (65). இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளர்கள்.

நேற்று மாலையில் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மன்னார்புரத்தில் உள்ள பெட்ரோல் பல்க்கில் பெட்ரோல் போடுவதற்காக வந்தனர். மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டினாா். சாலையில் வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

பலி

அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். நாகமல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்