காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியானார்.

Update: 2023-04-25 09:40 GMT

காஞ்சீபுரம் அடுத்த வாலாஜாபாத், கிதிரி பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). இவர் மாகரல் மின்வாரியம் அலுவலகத்தில் வயர் மேனாக கடந்த 4 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்

மாகரல் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பாதித்த மின்கம்பங்களை பொருமாள் சீரமைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. பின்னர் அங்கிருந்தவர்கள் ஆபத்தான நிலையில் பொருமாளை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிசிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உயிரிழந்த பெருமாள் மனைவி சுசீலா புகார் அளித்ததின் பேரில் மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைமலைநகர் அடுத்த அலமேலுமங்காபுரம் வரதராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜியாம்மா (வயது 48), இவரது 2-வது மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளதால் உறவினர்களுக்கு புதிய ஆடைகள் எடுப்பது குறித்து குடும்பத்தில் உள்ள நபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த விஜியம்மா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டார் மற்றும் அக்கம்பக்கத்தினர் விஜியம்மாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்