அரியலூர் மாவட்டம் கீழராயம்புரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 55), மரம் வெட்டும் கூலி தொழிலாளி. இவர் நேற்று குழுமூர் பகுதியில் மரம் வெட்டிவிட்டு கீழராயம்புரம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வஞ்சினபும் அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நீலமேகத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நீலமேகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.