நெல்லை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்தவர் பொற்கோராஜ் (வயது 50). இவர் மும்பையில் தங்கி இருந்து கேபிள் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 1 வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் பெற்கோராஜ் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் கல்லூரி பஸ்-மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பொற்கோராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீஹா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.