களக்காட்டில் பயங்கரம்: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை

களக்காட்டில் கல்லால் தாக்கி தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்

Update: 2022-06-07 21:00 GMT

களக்காடு:

களக்காட்டில் கல்லால் தாக்கி தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

ஓட்டல் தொழிலாளி

நெல்லை மாவட்டம் களக்காடு வியாசராஜபுரத்தை சேர்ந்தவர் பீர்முகைதீன் (வயது 65). இவருக்கு திருமணமாகி மைதீன் பீவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பீர்முகைதீன் களக்காட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் வேலை முடிந்ததும், களக்காடு புதிய பஸ்நிலையம் முன்பு மற்றொருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

தகராறு

அப்போது திடீர் என அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அந்த நபர், அங்கு கிடந்த செங்கலால் பீர்முகைதீனை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுபற்றி களக்காடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக, தப்பி ஓடிய அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளத்தை சேர்ந்த தொழிலாளி ஜெயபால் (55) என்பது தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து பீர்முகைதீன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்