மரக்கிளை விழுந்து தொழிலாளி சாவு

பாவூர்சத்திரம் அருகே மரக்கிளை விழுந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2022-11-23 18:45 GMT

பாவூர்சத்திரம்:

சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை இந்திரா காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). சற்று கால் ஊனமானவர். கூலி வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று கீழப்பாவூர் அக்ரஹாரம் 3-வது தெருவில் ஒரு வீட்டின் முன்பு இருந்த மரத்தின் கிளைகளை வெட்டும் பணியில் இவரும் மற்றும் சிலரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரக்கிளை ஒன்று அய்யப்பன் மீது விழுந்தது. இதனால் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்