மார்பிள் கல் விழுந்து தொழிலாளி சாவு

மார்த்தாண்டம் அருகே லாரியில் இருந்து பாரம் இறக்கிய போது மார்பிள் கல் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-01 20:41 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே லாரியில் இருந்து பாரம் இறக்கிய போது மார்பிள் கல் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

மார்த்தாண்டம் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 43). இவருடைய மனைவி வினிதா (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜேஷ் லாரியில் பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளி.

தூத்துக்குடியில் இருந்து மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு ஆலுவிளையில் உள்ள 3 வீடுகளுக்கு மார்பிள் கல் ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது.

மார்பிள் கல் விழுந்து சாவு

அங்கு லாரியில் இருந்து ராஜேஷ் உள்ளிட்ட தொழிலாளர்கள் மார்பிள் கல் இறக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று லாரியில் இருந்து மார்பிள் கற்கள் சரிந்து ராஜேஷ் மீது விழுந்தது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்