ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகில் உள்ள மண்டலக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள மற்றொரு நபருக்கு சொந்தமான வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை என்பதற்காக, மின்கம்பத்தில் ஏறி சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது தனபாலை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் இறந்த நிலையில் மின்கம்பியில் தொங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் தனபால் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.