சாலை தடுப்பில் ஸ்கூட்டர் மோதி தொழிலாளி சாவு
சாலை தடுப்பில் ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் செந்துறை பகுதியில் செல்போன் கேபிள் பராமரிப்பு பணிகளை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கார்த்திக் செந்துறை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். செந்துறை மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது சாலை தடுப்பில் ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் செல்போன் கேபிள் அடையாளத்திற்காக தரையில் நடப்பட்டிருந்த சிமெண்டு கல்லில் மோதி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.