பாலத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி
பாலத்தில் இருந்து கிழே விழுந்த தொழிலாளி பலியானார்.
பாலத்தில் இருந்து கிழே விழுந்த தொழிலாளி பலியானார்.தர்மபுரி அருகே உள்ள குப்பூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 31). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் குப்பூர் அருகே உள்ள பாலத்தின் கீழ்ப்பகுதியில் இறந்துகிடந்தார். தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் வேலு பாலத்தின் மேல் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.