வேன் மோதி தொழிலாளி படுகாயம்; டிரைவர் கைது

சங்கரன்கோவில் அருகே வேன் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-28 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கக்கன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் வேலுசாமி மகன் துரைசாமி (வயது 36). கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பாட்டத்தூர் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் துரைசாமியை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் புதுமனை 5-வது தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் பாலு என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்