மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்
கிணத்துக்கடவில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 62). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை ஏலூர் பிரிவு அருகே பொள்ளாச்சி-கோவை சாலையில் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஜெய்கணேஷ் (46) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் பெருமாள்சாமி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள்சாமி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.