கார் மோதி தொழிலாளி காயம்

கார் மோதி தொழிலாளி காயம் அடைந்தார்.

Update: 2023-08-03 19:02 GMT

திருப்புவனம்

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த நல்லாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(வயது 55). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைகளை முடித்துவிட்டு, சிவகங்கையில் இருந்து நல்லாகுளத்துக்கு மோட்டார்சைக்கிளில் வந்தார். நல்லாகுளம் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது பின்னால் மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கருப்பையா சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா விசாரித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்