தொழிலாளி வீட்டில் நகைகள் திருட்டு
திண்டிவனம் அருகே தொழிலாளி வீட்டில் நகைகள் திருட்டு
திண்டிவனம்
திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் மகன் பூபாலன்(வயது 34). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் தனது குடும்பத்தினருடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவருகே இருந்த ஓட்டை வழியாக கையை விட்டு தாழ்பாளை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 1½ பவுன் நகை, 2 வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்று விட்டான். இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகிறார்கள்.